நிஷ்மி, அக்கரைப்பற்று-
வாழ்வின் எழுச்சி (திவிநெகும) தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆறாம் கட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குடும்பப் பொருளாதாரம் மற்றும் போஷாக்கினை மேம்படுத்தி மனைப் பொருளாதார அலகுகளை வலுவூட்டும் இத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நேற்று (20) திங்கட்கிழமை அக்கரைப்பற்று– 03ம் பிரிவில் சுப வேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.கபீர் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று ஆயிஷா மஹா வித்தியாலய அதிபர் பிரதீப பிரபா எம்.ஏ.சி.அப்துல்ஹைய்யூ அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இஸ்பஹான்;, கல்லோயா வலது கரை நீர் முகாமைத்துவக் குழுக்களின் சம்மேளனத் தலைவரும், ஓய்வு பெற்ற அதிபருமான எம்.ஐ.எம்.அபூபக்கர், அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜெய்னுதீன், ஓய்வு பெற்றஇளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ஏ.ஜி.அப்துல் கபூர் ஆகியோர்களும் கலந்து கொண்டதோடு:
அதிதிகள் சமுர்த்திப் பயனாளிகளுக்கு பயன்தரும் மாங்கன்றுகள், நல்லினத் தென்னங் கன்றுகள் மற்றும் கத்தரி,மிளகாய், தக்காளிக் கன்றுகளையும், பயிர் விதைப் பக்கட்டுகளையும் வழங்கியதோடு மாங்கன்று ஒன்றினையும் நட்டு வைத்தார்கள் ;. கலந்து கொண்ட அதிதிகளும் பயளாளிகளுக்கு மாங்கன்றுகள், நல்லினத் தென்னங் கன்றுகள் மற்றும் கத்தரி,மிளகாய், தக்காளிக் கன்றுகளையும், பயிர் விதைப் பக்கட்டுகளையும் வழங்கினார்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment