இருப்பை உறுதிசெய்ய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்- பதுளையில் நசீர் MPC

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் உரை நிகழ்த்தும் போது...



































பைஷல் இஸ்மாயில்-

ன்று இலங்கை முழுவதும் நமது இருப்பையும் அடையாளத்தையும் சில இனவாதிகள் துடைத்தெறியப் பார்க்கின்றார்கள். அதுமாத்திரமின்றி அதனை ஒவ்வொன்றாய்த் தொட்டு நமது உடமைகளையும், பொருளாதாரத்தையும், இல்லறங்களையும், வியாபார நிலையங்களிலும் கை வைத்துவிட்டு எல்லாவற்றுக்கும் மேலாக நமது உயிரையும் பதம் பார்த்து அச்சுறுத்தியும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமூகத்தையும் அடக்கியாளப் பார்க்கின்றார்கள். இதனை நாம் இன்னும் இவ்வாறே பார்த்துக் கொண்டிருப்பதா? என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிடும் ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பதுளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேலும் தெரிவிக்கையில்,

இப்படி ஒரு இக்கட்டான காலகட்டத்தில்தான் நமது முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்று நாம் எதிர்நோக்கியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலானது வெறுமனே ஒரு மாகாண சபை உறுப்பினரை மட்டும் வென்றெடுப்பதற்கான தேர்தலாக மாத்திரம் இந்த தேர்தலை கருத முடியாது.

மாறாக எமக்கும் இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் அதைவிட எமது எதர்கால சந்ததியினருக்கும் எதிராக இன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சமூக, பொருளாதார, உளவியல் வன்முறைக்கு எதிரான ஒரு ஆக்கபூர்வ அரசியல் தந்திரோபாயமாக இத்தேர்தலை பயன்படுத்த முன்வருவதோடு எம்முடைய இருப்பையும், அடயாளத்தையும் தற்காத்துக் கொள்ளும் ஓர் அரிய சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்த இன்று நாம் அனைவரும் ஒன்றினைந்து ஒற்றுமையின் பலத்தை எமது சமூகத்துக்கு எடுக்காட்ட முன்வரவேண்டும் என்றார்.

அமைச்சர் நசீர் அகமட் உரை நிகழ்த்தும் போது...
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உரை நிகழ்த்தும்போது..
பதுளை மாவட்ட வேட்பாளர் டாக்டர் மஹ்றூப் உரை நிகழ்த்தும்போது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :