கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் இன்று (19) மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளன.
கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, சமூக சேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற் பயிற்சிக் கல்வியமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, விமலவீர திசாநாயக்க, இஸட்.ஏ.ஹாபீஸ் நசீர் அஹமட், மாகாண சபைத் தவிசாளர் திருமதி.டபிள்யூ.யூ.எம்.ஆரியவதி கலப்பதி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருனாகரன், கல்வி அமைச்சின் செயலாளர் என்.என்.ஏ.புஸ்பகுமார, மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், மற்றும் விளையாட்டுத் துறை உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

0 comments :
Post a Comment