ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

வா மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நாளை வெள்ளிக்கிழமை ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தமெத்திவ் தெரிவித்தார். 

பதுளை மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளதுடன் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள ஏனைய பாடசாலைகள் பல வாக்களிப்பு மத்திய நிலையங்களாகவும் பொலிஸார் பாதுகாப்பு கடமை இடங்களாகவும் இருப்பதால் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாளை வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக விடுமுறை நாளொன்றில் பாடசாலைகள் திறக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

நாளை மூடப்படும் ஊவா மாகாண பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :