தமிழ் மாமன்றம் நடாத்திய விசேட விவாதப் பயிரலங்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

கஜன் -

 ல இலக்கிய ரீதியில் தனது காத்திரமான பங்களிப்பை ஆற்றி வரும் தமிழ் மாமன்றம், தனது இரண்டாவது வருட  பயணத்தினுடைய ஆரம்ப செயற்பாடாக, வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விசேட விவாதப் பயிரங்கு  ஒன்றினை நேற்றைய தினம் (27.09.2013, சனிக்கிழமை) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடாத்தியது.

சென்ற வருடத்தில் வவுனியா மாவட்டதின் 21 பாடசாலைகளுக்கு, 7 கட்டமான விவாதப் பயிலங்குகளையும், பயிலரங்கின்  பெறுபேற்றை பரீட்சிக்கும் 'வன்னியின் வாதச்சமர் 2013' எனும் மாபெரும் விவாதப் போட்டியையும் நடாத்திய  அனுபவத்துடன், தமிழ் மாமன்றத்தின் மாபெரும் கலை விழாவான 'இயல் விழா 2014' வவுனியாவில் மிக சிறப்பாக  நடாத்திய பெருமிதத்துடனும், தனது இரண்டாம் கட்ட நகர்வுக்கு தயாராகியுள்ளது.

இவ்வருடத்திற்கான தமிழ் மாமனறத்தின் 'வன்னியின் வாதச்சமர் 2014' எனும் மாபெரும் விவாதப் போட்டியை  முன்னிட்டு இவ் விவாதப் பயிரலங்கு 27.09.2013 அன்று ஒழுங்குசெய்யப்பட்டது. காலை 9மணிக்கு ஆரம்பமான நிகழ்வில், கலாசார உத்தியோகத்தர்; இரத்தினம் நித்தியானத்தன் அவர்கள்,  தமிழாசிரியார் ஐ.கதிர்காமசேகரன் அவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் மாமன்ற உறுப்பினர்கள்,  தமிழ் அ10ர்வலர்கள் என பலதரப்பட்டோhர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு முன்பாக மாணவர்களின் பதிவுகள்  மேற்கொள்ளப்படது. நிகழ்வில் தமிழ் மாமன்றம் பற்றிய ஓர் அறிமுகத்தையும் தமிழ் மாமன்றத்தின் கடந்து  வந்த பாதை தொடர்பான விடயங்களையும் மேற்பபை உறுப்பினர் கிருபானந்தகுமார் அவர்கள்; வழங்கினார். 

தொடர்ந்து கலாசார உத்தியோகத்தர் இரத்தினம் நித்தியானந்தன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில்  தமிழ் மாமன்றம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் மிக காத்திரமான பங்களிப்பை வவுனியா மாவட்டத்திற்கு ஆற்றியுள்ளது. முறைப்படி பதிவு செய்யபட்டுள்ளது. இவைகள் பாரட்டப்பட வேண்டிய விடயம், தொடர்ந்தும் இளைஞர்கள் இம்  மன்றத்துக்குள் உள்வாங்கப்பட்டு, கலை இலக்கிய ரீதியிலான பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து வன்னியின் வாதச்சமர் 2013 இல் காலிறுதிக்கு தெரிவான அணிகளுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்  வழங்கும் நிகழ்வு இடம் பெற்றன. தொடர்ந்து, மாணவர்களுடைய பேச்சாற்றலை மதிப்பிடும் முகமாக 2நிமிட  பேச்சிற்கான தலைப்புகள் கொடுக்கப்பட்டு, பேச்சாற்றல் மதிப்பிடப்பட்டது. பேச்சாற்றல் தொடர்பான கருத்துரையினை  தமிழாசிரியர் ஐ.கதிர்காமசேகரன் அவர்கள், தனக்கே உரிய பாணியில், மிகவும் சிறப்பாக, ஒரு பேச்சு  எப்படி இருக்க வேண்டும், என்ன விடயங்களை கவனிக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவான விளக்கத்தை உதாரணங்களுடன் சுவைபட  வழங்கினார்.

தொடர்ந்து மாணவர் கருத்து மோதல் இடம் பெற்றது. இதனை தமிழ் மாமன்றதினுடைய இணைச் செயலாளர் கி.நிக்சலன்  திறம்பட நடாத்தினார், மாணவர்களின் வாதத் திறமையை வெளிக்கொணரும் வகையும் மிகவும் சுவரஸ்யமாகவும், காரசாரமன  விவாதங்களுடன் இந் நிகழ்வு இடம் பெற்றது.

மதிய இடைவேளையைத் தொடர்ந்து, சுழலும் சொற்போர் இடம் பெற்றர். மாணவர்களின் விவாதத் திறமையை மதிப்பிடும்  முகமாக இந் நிகழ்வு அரங்கேறியது. மாணவர்கள் தங்களுடைய காரசாரமான கருத்துக்களை முன்வைத்து சுழலும் சொற்போரை  சொற்கணைகள் நிரம்பிய களமாக மாற்றினர். தொடர்ந்து விவாதம் இடம் பெற்றது. பயிலரங்கின் முழுமையான  பயிற்சியின் வெளிப்பாடக அவ் விவாதம் இடம் பெற்றிருந்தது. விவாத மேடையை தங்களுடைய ஆணித்தரமான கருத்துகளால்  மாணவர்கள் அலங்கரித்து சிறப்பித்தினர்.

அதனைத் தொடர்ந்து தமிழ் மாமன்றம் நடாத்த இருக்கின்ற வன்pயின் வாதச்சமர் 2014 இனுடைய உத்தியோகபூர்வ  அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்ற வருடம் வவுனியா மாவட்த்திற்குள் மட்டும் நடாத்தப்பட்ட இப்போட்டி இம்முறை  வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என வன்னி மாவட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் போட்டியாக  நடாத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றியுரையுடன் இந் நிகழ்வு நிறைவெய்தியது.

இந் நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற முழுமையான காரணம், அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் செயற்பாட்ட தமிழ் மாமன்றதிற்குள், புதிதாக உள்வாங்கப்பட்ட துடிப்புமிக்க இளைஞர்கள் என்பன குறிப்பிடத்தக்கது. உழைத்த அத்தனை  உறுப்பினர்களுக்கும், வருகை தந்த ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனவருக்கும் தமிழ் மாமனற்ம் தனது  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :