அதற்கு அனைவரும் துணிகரமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று உரையாற்றினார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்து:-
“இன்றிருக்கின்ற அந்த மேலாதிக்கப் போக்கு என்ற விடயத்தில் மாற்றம் வேண்டும். தேசிய கீதத்தைக் கூட நாங்கள் இன்னும் ஒரே மொழியில் படித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமை இருப்பது வருந்தத்தக்க விடயம்.
இதைக் கொஞ்சம் துணிகரமாக எங்களுடை நிகழ்ச்சியிலாவது இரண்டு மொழிகளிலும் இசைப்பதற்கு நாங்கள் துணிய வேண்டும்.
நாங்களாக இருக்கிற ஒரு மாகாண சபையில் கூட அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அது உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம். என்னைப் பொறுத்தமட்டில் நாங்கள் துணிகரமாக சில விசயங்களில் அரசாங்கம் மேலிடம் பிடிவாதமாக இருந்தாலும், இந்த மாநிலத்திலாவது அது சரிவர நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அமைச்சர்களுக்கு துணிவு வேண்டும்.
பயப்படாமல் அந்த விசயங்களைச் செய்ய வேண்டும். இப்போது ஊவா மாகாணத்திலும் ஒரு தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. அங்கும் கூட முழுக்க முழுக்க தமிழை மாத்திரம் தெரிந்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அங்கும் இதேவிதமாகத்தான் விசயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எனவே அங்கிருக்கின்ற மலையகத் தலைமைகளும் இந்த விசயத்தில் கொஞ்சம் பிடிவாதமக இருக்க வேண்டும்.
.jpg)
0 comments :
Post a Comment