இக்பால் அலி-
கோனிகொட பிராந்திய வைத்தியசாலையில் நீண்ட காலமாக சுத்தமான குடி நீர் கிணறொன்று இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சவூதி அரேபியா நாட்டு செல்வந்தர்களின் உதவியுடன் இந்த வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெற்றதையிட்டு இப்பிராந்திய வைத்தியசாலையை பயன்படுத்துகின்ற அனைத்து சிங்கள
மக்களும் மகிழ்ச்சியடைவதுடன் இதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று மீதியத்த ரஜமாஹ விஹாரையின் விஹாராதிபதி கொட்டகெதர சந்திரரத்தின ஹிமி தெரிவித்தார்.
தைபா கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சவூதி நாட்டுச் செல்வந்தரான சுல்தான் அல் அம்ரியின் அனுசணையுடன் கோணிகொட பிராந்திய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் விநியோகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட விஹாராதிபதி கொட்டகெதர சந்திரரத்தின ஹிமி அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியதிகாரி பிரதீப் விக்கிரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சவூதி நாட்டுப் பிரமுகர்களான அஷ;nஷய்க் சுல்தான் அல் அம்ரி, அஷ;nஷய்க் காலித் ஹியாசி, அப்துல் அல் அம்ரி, இந்நிறுவனத்தின் தலைவர் அஷ;nஷய்க் ஜே. எம். ரிஸ்வான் மதனி, ஆசிரியர் எஸ். யூ. எம் சமீம், வைத்திய பரிசோதகர் முஸ்மாக் உள்ளிட்டவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இந்தப் பிரதேசத்தில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிணறு நிர்மாணிக்கப்படும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. ஏற்கெனவே ஒரு கிணறு இருக்கும் போது இன்னும் எதற்கு கிணறு என்று பலர் பல கேள்விகள் கேட்டனர். ஆனால் அதில் பயன்படுத்த முடியாதளவு கிவுழ் காணப்படுகின்றனது. இந்த கிணற்று நீரைப் பயன்படுத்த முடியாது. இந்த இடையூறு விளைத்தவர்களுக்கு பதிலடியாக மிகவும் சுத்தமான நீர் இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரு தூய நோகக்கத்துடன் செய்யப்பட்ட காரியம் என்பதால் அது நல்ல பயனைத் தந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment