பொத்துவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். அப்துல் றகீம் பலமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்று பொத்துவில் பிறைன்துரைக்கண்டம் வன்னியனார் வாய்கால் பகுதிக்கான புதிய விவசாய அபிவிருத்தி குழுத்தெரிவின் போது ஏற்பட்ட குழப்ப நிலையினால் பிரதேச அரசியல் பிரமுகர் ஒருவரின் அடியாட்களால் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். அந்த குழப்ப நிலையினை கட்டுப்படுத்த முயன்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜ. றாபி மற்றும் காஜாமுகைதீன் ஆகியோரும் பலமாக தாக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த பிரதேச அரசியல்வாதியின் சகோதரர் தொடர்ந்து நிர்வாகப்பதவியை தக்கவைத்து வந்ததாகவும் இன்று நிர்வாகத் தெரிவில் அவர் தெரிவு செய்யப்படாததையும் குறித்து இக்குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.
பொத்துவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். அப்துல் றகீம் அவர்கள் ஒரு நேர்மையான அரச ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை பொத்துவில் விவசாய குழு அமைப்புக்கள் வன்மையாக கண்டிக்கின்றன. போலிசார் விசாரனையினை மேற் கொண்டு வருகின்றார்கள்.

0 comments :
Post a Comment