குருமுனி ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமியவர்களின் 37வது நினைவு தினம்





த.நவோஜ்-

ந்தியாவின் காஸ்மீர் தேசத்தில் அவதரித்து இலங்கையில் பல்வேறு பிரதேசங்களிலும் பல ஆலயங்களை ஸ்தாபித்து, மக்களுக்கு நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும், சமய உணர்வுகளையும், தர்ம சிந்தனைகளையும் புகட்டி சமூகம் மேன்மையுறுவதற்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்ததுடன் மக்களால் என்றும் போற்றப்படும் வணக்கத்திற்குரிய மகானாகவும் விளங்கிய வணக்கத்திற்குரிய குருமுனி ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமியவர்களின் 37வது நினைவு தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்க குச்சவெளி ஸ்ரீ செம்பீஸ்வரர் ஆலயத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன், குச்சவெளி பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய திருவருள் ஆண்கள், பெண்கள் சங்கங்களின் உறுப்பினர்களும், குச்சவெளி, கும்புறுப்பிட்டி கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வைபவத்தில் சுவாமியவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து விஷேட பூசைகள் நடைபெற்றதுடன், சுவாமியவர்களைப் பற்றிய நினைவுப் பேருரைகளும், சுவாமியால் இயற்றப்பட்ட பஜனைப் பாடல்களும் பக்தர்களால் மெய்யுருகிப்பாடப்பட்டது. அத்துடன் கும்புறுப்பிட்டி கிராம மக்களால் அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜி அவர்கள்; அவதரித்து இலங்கையின் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் செம்பிமலையில் 25.08.1938 இல் சிவலிங்க ஆலயத்தினையும், மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்தினையும், இக்கிராமத்தின் அயற்கிராமமான செட்டிபாளையம் கிராமத்தில் சோமகலாநாதர் ஆலயத்தினையும் ஸ்தாபித்து மக்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கு வழியமைத்துத்தந்தவர் வணக்கத்திற்குரிய சுவாமிஜி சோமேஸ்வரானந்தகிரி ஆவார்.

இவர் 1939ம் ஆண்டு மட்டக்களப்பு மண்ணிற்கும் குருக்கள்மடம் கிராமத்திற்கும் முதன்முறையாக காலடிபதித்து தற்போது ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்தில் இயங்கிவரும் திருவருள் ஆண்கள் பெண்கள் சங்கங்களை 1940ம் ஆண்டு ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் ஒழுக்க சிந்தனைகளை பிரசங்க உரை மூலம் நிகழ்த்தி பஞ்சசீல ஒழுக்கங்களை வாழ்வில் கடைப்பிடிக்க வழிகாட்டியவர்.

இவ்வாறான பெருமைக்குரிய குருமுனி அவர்கள் 01.09.1977ம் நாள் சமாதி அடைந்தார். அன்னாரின் சமாதி தென்னிந்தியாவிலே திண்டுக்கல் எனும் இடத்தில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :