துறைசார் பதவிநியமனங்களுக்கான ஆட்சேர்ப்பின் போது:துறைசார் டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்கவும்-இ.இ.ஆ.ச

எம்.எம்.ஏ.ஸமட்-

துறைசார் பதவிநியமனங்களுக்கான ஆட்சேர்ப்பின்போது துறைசார் பட்டதாரிகளுடன், துறைசார் டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்; கோரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

உளவள ஆலோசகர்;, உளவள ஆலோசக உதவியாளர் வழிகாட்டல் மற்றும் உள வள ஆலோசனை ஆசிரியர் என்ற உளவளத்துறை சார்ந்த பதவி நியமனங்களுக் காக ஆட்சேர்பபின்;போது, உளவளத்துணைறயில் டிப்ளோமா கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ள உளவளத்துறை  டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்க வேண்டும்.

சவால்களும் சிக்கல்களும் நிறைந்த வாழ்க்கைப் பொழுதில் மக்கள் நிம்மதி தேடி அலைகின்றனர். தொடர்ந்துவரும் வாழ்வாதார நெருக்கடிகளும், உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவும் அதனால் உருவாகும் நெருக்கடிமிக்க வாழ்க்கை முறைகைளும் பலரை உளப் பாதிப்புக்குள் தள்ளிவிடுகிறது.

இதனடிப்படையில் இலங்கை மக்களிடையே குறிப்பிட்ட வீதமானோர் உளப் பிரச் சினையுடன் காணப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இன்று நாட்டில் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ளத்தில் ஏற்படும் உபாதைகள் காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வன்செயல்கள், பல்வேறுவகையிலான துஷ்பிரயோக நடவடிக்கைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்ற சமூக பிரச்சினைகளுக்கும் உளப்பாதிப்புக்களும் காரணமாகவுள்ளதாக அறியப்படுகிறது.

இதற்கு, சுகாதார அமைச்சின்பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ள கருத்து ஆதாரமாக உள்ளது. உலகில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 8 இலட்சம் எனவும், அது 40 செக்கனுக்கு ஒன்று எனவும், 2012 இல் 20-49வயதுக்குட்பட்டவர்களின் இறப்பிற்கு முதன்மைக்காரணியான தற்கொலை ஐந்தாவது இடத்திலும், 15-29 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்தில் அது இரண்டா வது இடத்திலும் உள்;ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2011இல் 3770பேரும், 2012இல் 3524பேரும், 2013இல் 3461பேரும் தற் கொலை செய்துகொண்டுள்ளதாகவும், இது ஒரு இலட்சம் பேருக்கு 28.5 எனவும், இதன்காரணமாக அதிகதற்கொலை நடக்கும் நாடுகளின் விகிதாசாரத்தில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்; தகவல்கள் தெரிவிக் கின்றன.

மாணவர்கள் மத்தியில் சம காலத்தில் ஒழுக்க விழுமியங்கள் குறைந்து வருகிறது. நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் பாவனை மாணவர் சமூகத்தில் அதி கரித்துள்ளதன் விளைவாக அவர்களின் வழிகாட்டல் முன்மாதிகளாக அவர்கள் காணும் காட்சிகளும் காட்சிகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் இருக்கிறார்களே தவிர. ஆசிரியர்களை வழிகாட்டல் முன்மாதிரிகளாக பலமாணவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. பாடசாலைகளில் இடம்பெறுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் தொடர்பான சிற்சில சம்பவங்கள் இவற்றை நன்கு புலப்படுத்துகின்றது.

இம்மாணவர்களின் பின்னணியை ஆராய்கின்ற போதும். அவர்களின் நடத்தைக் கோலங்களை அவதானிக்கின்றபோதும், அவர்களிலும் உளப்பிரச்சினைகள் காணப் படுகின்றனவா என்று சந்தேகிக்கக் தோன்றுகிறது. சில மாணவர்களின் சில நட வடிக்கைகளின் பின்னால் உளப்பாதிப்புக்கள் கனிசமான பங்கினை செலுத்துகிறது. 

இவ்வாறான நிலையில் குறித்த நபர்களுக்கும் மாணவர்களுக்கும் உளவளத் துறைசார் அறிவு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. இவ்வாறு பல்வேறு மட்டங்களில் பல்வேறு தரப்பினர்களுக்கு உளவள ஆலோசனை வழங்க வேண்டிய தேவை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இவற்றைக் கருத்திற்கொண்டு சமூக சேவைகள் அமைச்சு. சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு என்பவற்றினால் பிரதேசசெயலகங்களிலும், பாடசாலைகளிலும் உளவளத் துறைசார்ந்த நியமனங்களாக உளவள ஆலோசர்களும் உளவள உதவியாளர் களும் வழிகாட்டல் மற்றும் உளவள ஆலோசனை ஆசிரியர்களும் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

இந்த நியமனங்களின்போது பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், உளவியலுடன் தொடர்புபட்ட உளவியல் உளவளத்துணை கற்கை நெறியினை  கனத்த கால நேரங்களையும், பெருத்த பணத்தொகையையும்; செலவு செய்து திறமையாகச் சித்தியடைந்து டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகின்றமை ஏற்புடையதல்ல
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத் திலும், தென்கிழக்குப் பல்லைக்கழகம் போன்ற உளவளத்துணை கற்கை நெறிக் காக அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவகங்களிலும், உளவியல் உளவளத் துறையில் டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்று நூற்றுக்கணக்கானோர் அக்கல்வி நிறுவகங்களிலிருந்து வருடந்தோறும் வெளியேறுகின்றபோதிலும் அவர்கள் குறித்த நியமனங்களின்போது உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்படுகின்றனர்.

இப்பதவிகளுக்காக  ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களில் கூட டிப்ளோமா கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தவர்களும் விண்ணப்பிக்க கோரப்படுவதில்லை இதனால் இக்கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தவர்கள் அவர்களது துறையில் தொழில்வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்வதில் எதிர்காலமின்றி உள்ளனர்.


இந்நிலமைகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையில் உளவளத்துணைக் கற்கை நெறியினை கற்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற கற்கை நிலையங்களில்; உளவியல் உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறியினை முறையாகக் கற்று அதற்கான தொழில்வாண்மை செயல்முறைப் பயிற்சியினையும், டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்று இற்றைவரை தொழில்வாய்ப்பின்றி இருக்கும் நூற்றுக்கணக்கான உளவளத் துணை டிப்ளோமாதாரிகளையும் உளவள ஆலோசகர் மற்றும் உளவள ஆலோசக உதவியாளர், வழிகாட்டல் மற்றும் உளவள ஆலோசனை ஆசிரியர்கள் போன்ற பதவி நியமனங்களுக்கான ஆட்சேர்ப்பின்போது இந்த டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்; சங்கம் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை அடங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :