ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதில் வேட்பாளராகப் போட்டியிட முயன்றால், அதற்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்லப் போவதாக ஜே.வி.பி எச்சரித்துள்ளது.
17 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ் தமது இரண்டாவது பதவிக் காலத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்று, ஆரம்பித்துள்ளார். அப்படி 17 ஆவது திருத்தத்தின் கீழ் பதவி ஏற்று அதிகாரத்தில் இருப்பவர், மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்று 18 ஆவது திருத்தம் தெளிவுபடுத்தவில்லை.
ஆகவே, 18 ஆவது திருத்தம் அதன் வியாக்கியான விடயத்தில் சிக்கலைத் தந்துள்ளது. எனவே, ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வரும் தமது நோக்கத்தை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தும்போது, தாம் நீதிமன்றத்தை நாடி அதனைத் தடுக்கப் போவதாக, ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத்தும், கட்சி சட்டத்தரணியும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சுனில் வட்டகலவும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment