சியான் -
ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மெகா நைட் -2014 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்று வருகிறது.
கழகத்தின் தலைவர்: றிபாய்தின்
செயலாளர்: ராஸ்முகம்மட்
பொருளாளர்: சுஜான் ஆகியோரின் வழி நடத்தலுடன் இடம்பெறும் இப்போட்டிகளில் அம்பாரை மாவட்டத்தின் சகல பாகங்களில் இருந்தும் 64 கழகங்கள் பங்குபற்றி விழையாடுகின்றனர்.
வெற்றி பெரும் முதல் அணிக்கு -25000 ரூபாவும்
இரண்டாம் அணிக்கு- 10000 ரூபாவும் அன்பளிப்புப் பணமாக வழங்கப்பட இருப்பதுடன் வெற்றிக்கேடயங்களும் ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட இருக்கிறது.
இப்போட்டிகளின் 5ஆம் நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் கலந்து சிறப்பித்தார்.
இம்மெகா நைட் கிறிக்கெட்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாபெரும் நிகழ்வாக இடம்பெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






0 comments :
Post a Comment