சலீம் றமீஸ்-
மஹிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டிட திறப்பு விழா எதிர்வரும் 18ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
பாடசாலையின் அதிபர் திருமதி என்.யூ.எச்.எம்.சித்தீக் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம கலந்து கொள்ளவுள்ளார். மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமல வீர திஸாநாயக்கா, ம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.ஐ.எம்.மனசூர் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஏ.எம்.ஜெமீல், எம்.எஸ்.ஏ.அமீர், ஆரீப் சம்சுதீன், ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், உட்பட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.என்.ஏ.புஸ்பகுமார, மாகாணப் பணிப்பாளர் என்.ரி.எ.நிஸாம், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், நிந்தவூர் கோட்டக்கல்விக் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் வை.எல்.சுலைமாலெப்பை உட்பட கல்வி உயரதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

0 comments :
Post a Comment