தேசிய காங்கிரஸின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் பாலமுனை அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும்

சலீம் றமீஸ்-

தேசிய காங்கிரஸின் ஏற்பாட்டில் மறைந்த மாமனிதர் கலாநிதி எம்.எச்;.எம்.அஷ்ரப்  அவர்களது 14வது நினைவேந்தல் நிகழ்வும், அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிக்கும்  நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலமுனை பிரதேசத்தில் இடம் பெற்றது.

மாமனிதர் அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு உள்ளுராட்சி மாகாண சபைகள்  அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்  எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 14 கோடி ரூபா செலவில் பாலமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மேலும் புதியதாக  அபிவிருத்தி செய்யப்படவுள்ள பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 34 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  பாலமுனை அரசயடி கொங்கிறீட் வீதி(30 மில்லியன்) , பாலமுனை ஊர்க்கரையோர வீதி(04 மில்லியன்) ஆகியவைகள் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் கே.எல்.உபைதுல்லா தலைமையில் இடம் பெற்ற இந்த  நிகழ்வுகளில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி  மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து அபிவிருத்தி பணிகளை மக்களிடம்  கையளித்தார். அமைச்சருடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,  வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும்,  கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட கிழக்கு  மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், ஆரிப் சம்சுதீன், கிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர்  எம்.ஐ.சலாஹூதீன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  எம்.எம்.றியாஸ் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :