18ஆம் திகதி நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிட திறப்பு விழா

சலீம் றமீஸ்-

ஹிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டிட  திறப்பு விழா எதிர்வரும் 18ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

பாடசாலையின் அதிபர் திருமதி என்.யூ.எச்.எம்.சித்தீக் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான்  விஜய விக்ரம கலந்து கொள்ளவுள்ளார். மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமல  வீர திஸாநாயக்கா,  ம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.ஐ.எம்.மனசூர் , கிழக்கு மாகாண சபை  உறுப்பினர்களான ஏ.ஏ.எம்.ஜெமீல், எம்.எஸ்.ஏ.அமீர், ஆரீப் சம்சுதீன்,  ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், உட்பட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  என்.என்.ஏ.புஸ்பகுமார, மாகாணப் பணிப்பாளர் என்.ரி.எ.நிஸாம், கல்முனை  வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல், நிந்தவூர் கோட்டக்கல்விக்  பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர்  வை.எல்.சுலைமாலெப்பை உட்பட கல்வி உயரதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள்,  முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :