நைஜீரியாவின் லாகோஸ் நகருக்கருகேயுள்ள இகோடுன் பகுதியிலுள்ள தேவாலயமொன்றே இடிந்து விழுந்ததாக தேசிய அவசர மேலாண்மை இயக்கத்தின் தென்மேற்கு பகுதி ஒருங்கிணைப்பாளரான இப்ராகிம் பேரின்லோயி தெரிவித்துள்ளார்.
குறித்த தேவாலயம் இடிந்து விழுந்ததனால் ஏராளமானோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாகவும் மீட்பு படையினரின் தீவிர முயற்சியினால் 124 பேரை மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளிலிருந்து மீட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் குறித்த தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையிலே மீண்டும் நேற்று சனிக்கிழமை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக ஒருங்கிணைப்பாளரான இப்ராகிம் பேரின்லோயி தெரிவித்துள்ளார்.
எங்கள் தேசம்

0 comments :
Post a Comment