பி. முஹாஜிரீன்-
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி காரியாலயமும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அக்கரைப்பற்றுக் கிளையும் இணைந்து இன்று (14) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். முனவ்வர் தலைமையிலான சுகாதாரப் பிரிவினர் வீட்டுத் தரிசிப்புக்களை மேற்கொண்டு பரிசீலனை மேற்கொண்டதுடன் பொதுமக்களுக்கு நுளம்பு ஒழிப்புத் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியதுடன் வீட்டிலுள்ள கிணறுகளில் நுளம்பு பெருகுவதைக் கட்டுப்படுத்த 'கெப்ரீஸ்' வகை மீன் குஞ்சுகளும் கிணறுகளில் விடப்பட்டன.
இவ் வேலைத்திட்டத்தில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எச். பௌமி, எம்.எம். ஜெஸீர், மற்றும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அக்கரைப்பற்றுக் கிளையின் முக்கியஸ்தர்களான எம்.எம். நிஹாம், ஏ.எச்.எம். சிபாஸ், மௌலவி ஏ.எல்.எம். பாஸித், எம். பாறூக் உட்பட பிரதேச சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்களும், தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் அக்கரைப்பற்ற பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் இராணுவ படையின் உத்தியோகத்தர்களும் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment