பொத்துவில் அலுவலகத்திற்கு திறமையுள்ள ஆசிரியரை இணைத்துக் கொள்ள வேண்டும்.

காஷிம்-

புதிதாக திறக்கப்பட்ட பொத்துவில் உப வலயக்கல்வி அலுவலகத்துக்கான ஆசிரியர் ஆலோசகர்களுக்கான வெற்றிடங்களை நேர்முகப்பரீட்சையோ போட்டிப்பரீட்சையோ இன்றி அரசியல் வாதிகளும் கல்வி அதிகாரியும் இணைந்து தனக்கு சார்பானவர்களின் பெயர்களை வலய கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இவ்வேளையில் தமிழ் பாட ஆலோசகர் நியமனத்திற்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற ஓரு தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி 2012 ஆசிரியர் பயிற்சி கலாசாலை முடித்த ஒரு ஆசிரியரின் பெயரினை அரசியல்வாதியின் வேண்டுகோளுக்கினங்க நியமனம் வழங்க முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சகல திறமைகளையும் கொண்ட எம்.ஏ. தாஜகான் ஆசிரியரின் பெயரை போடுமாறு பல நபர்கள் கேட்டுக்கொண்ட பொழுதும் அவரை புறந்தள்ளி விட்டு தகுதியற்ற ஆசிரியரை நியமிக்க கோறுவது எந்த வகையில் நியாயமாகும். இதனை அம்பாரை மாவட்ட தேசிய ஐக்கிய ஊடக அமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது. 

ஏனென்றால் குறித்த திறமைகள் கொண்ட எம்.ஏ. தாஜகான் எனும் ஆசிரியர் எமது தேசிய ஊடக அமைப்பின் தேசிய அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஊடகவியலாளர் இன்று பாதிப்படையும் பொழுது ஊடக நிறுவனம் கைகட்டி நிற்காது என்பதை தெரிவிக்கின்றோம். எமது ஊடகவியலாளர் தாஜகான் அவர்களை ஏன் இணைத்துக்கொள்ள வேண்டுமென்றால் இவர்

• பட்டதாரி தமிழ் ஆசிரியர் இரண்டாம் வகுப்புச்சித்தி

• பட்டப்பின் கல்வி டிப்ளோமா (மெரிட்) சித்தி

• முதுகலைமானி (எம்.ஏ)- தமிழ்

• அல் இர்பான் மகளிர் கல்லூரியில் நியமன திகதியில் இருந்து தமிழ் கற்பித்து வருபவர்

• தரம் 2-11 சேவையில் உள்ளவர்

• க.பொ.த சா/த க.பொ. உ/த தமிழ் பாட வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருபவர்

• பொத்துவில் கோட்டத்தில் தமிழ் மொழித்தின போட்டிகளை நியமனத்திகதியில் இருந்து சிறப்பான முறையில் செயளாளர் உப செயளாளர் பதவிகளை வகித்து நடாத்தியவர்.

• அக்கரைப்பற்று தமிழ்பாடத்துக்கான பொத்துவில் கோட்ட வளவாளர்

• தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் வள நபர்

• தமிழ் பாடத்துறை சார்பான தேசிய மட்ட நூல்களை வெளியிட்டவர்

• இலங்கையின் பல பாகங்களிலும் தமிழ் பாடத்தை நடாத்தி வருபவர்

• பல நூல்களை வெளியிட்ட சிறந்த கவிஞர் எழுத்தாளர்

• யாருக்கும் அஞ்சாத சிறந்த ஊடகவியலாளர்

இப்படிப்பட்ட தமிழ் மொழியாற்றல் கொண்ட எமது அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆசிரியர் எம்.ஏ. தாஜகான் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம் என்ன? இது பற்றி குறித்த ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனக்கு அநீதி நடக்காது என்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் வலயக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் (தமிழ்) ஆகியவர்கள் சரியான வளத்தை இனங்கான்பார்கள் அது வரைக்கும் தான் பொறுமையாக இருப்பதாக தெரிவித்தார்.

மாகாண கல்வி அதிகாரி அவர்கள் புதிதாக திறக்கப்பட்ட பொத்துவில் உப வலயக்கல்வி அலுவலகத்துக்கான ஆசிரியர் ஆலோசகர்களுக்கான வெற்றிடங்களை நேர்முகப்பரீட்சையோ  போட்டிப்பரீட்சையோ இன்றி நியமிக்காமல் நேர்முக பரீட்சை வைத்து தகுதியானவருக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் எமது ஊடக சங்கத்தின் வேண்டுகோளாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :