எஸ்.எம்.எம்.றம்ஸான்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் பல இன்று கல்முனை வலயப் பாடசாலைகளில் இடம்பெற்றன.
கல்முனை கிரீன்பீல்ட் ரோயல் வித்தியாலயத்தில் கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.மஜீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மரம் நடுதல் மற்றும் ஞாபகார்த்த பேருரை துஆப்பிரார்த்தனை என்பனவும் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment