எஸ்.எம்.எம்.றம்ஸான்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் பல இன்று கல்முனை வலயப் பாடசாலைகளில் இடம்பெற்றன.
சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் காரைதீவு பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் ஏ.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் துஆ பிரார்த்தனை, ஞாபகார்த்த பேருரை மற்றும் மர நடுகை என்பனவும் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment