இலங்கை பாதுகாப்பு அமைச்சின் நிபந்தனையற்ற மன்னிப்பினை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரையை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திலிருந்து உடனடியாக நீக்கிக் கொண்டதுடன், பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ளது.
தனது மன்னிப்புக் கடிதத்தினையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முதல் பக்கத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், இலங்கையின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டுரை வெளியான உடனேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குறித்த கட்டுரை தொடர்பில் இந்தியா உடனடியாக இராஜதந்திர ரீதியில் செயற்பட்டிருந்தது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பில் உடனடியான நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் இந்தியாவின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்படும்.
எனினும் விடயம் உடனடியாக உரிய தரப்புக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறித்து இந்திய அரசாங்கம் திருப்திகொண்டுள்ளது. வீ

0 comments :
Post a Comment