ரைஸ்-
கவிஞர் கிண்ணியா ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய சிறுவர் கட்டுரை அடங்கிய “கற்க கசடற” நூல் வெளியீட்டு விழா இன்று 03.08.2014 காலை கிண்ணியா பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஓய்வு பெற்ற அதிபர் பரீத் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் அழைக்கப்பட்டதோடு அதிதிகளாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். மஹ்ரூப், பிரதிக் கல்விப் பணிப்பாளர் முனவ்வரா நளீம், நகரசபை பிரதி தவிசாளர் எம்.சீ.சபறுள்ளா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
“கற்க கசடற” நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் ஏ.எம்.கஸ்புள்ளா பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபிற்கு வழங்கி வைக்க அதனைத் தொடர்ந்து அதிதிகள் பிரதிகளை வழங்கி வைத்தனர். நிகழ்வில் நகரபிதா உரை நிகழ்த்துவதையும் நிகழ்வுக்கு வருகை தந்தோரையும், புத்தகங்கள் பெறுவோரையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment