த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி கிராம சேவகர் பிரிவில் மூக்கர்ரகல் எனும் பிரதேசத்தில் புதையல் தோண்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் வாழைச்சேனை பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்த பொலிஸார் புதையல் எடுப்பதற்காக பாரியளவிலான இரண்டு மடுவுகளை வெட்டிய நிலையில் மூன்று சந்தேக நபர்களையும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும், துவிச்சக்கர வண்டி ஒன்றையும் வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவரும், ஓட்டமாவடியைச் சேர்ந்த இருவருமாக மூன்று பேர் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் புதையல் இருப்பதாக அறிந்து ஏழு தினங்களாக குறித்த பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பக் கட்ட விசாரனைகளில் இருந்து அறிய முடிந்ததாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment