மர்ஹூம் எஸ்.எல்.எம்.ஹசன் அஸ்ஹரியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்- அமைச்சர் நசீர்

பிரபல மார்க்க அறிஞரும் சமூகப் பற்றாளருமான எஸ்.எல்.எம்.ஹசன் அஸ்ஹரியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி ,கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

மர்ஹூம் ஹஸன் அஸ்ஹரியின் மறைவு குறித்து தாம் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இந்த இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமின்றி இன ஐக்கியத்தை விரும்புபவருக்கு பேரிடியாக இருக்குமென்று குறிப்பிட்டுள்ளார்.

ஹஸன் அஸ்ஹரியுடன் தனிப்பட்ட ரீதியிலும் அல்லது அரசியல் ரீதியிலும் நான் நெருங்கிப் பழகியவன் அவரது அறிவும், ஆற்றல் ,தீட்க்கன்னிய புத்தி ஆகியவை கண்டு நான் பூரிப்படைந்ததுண்டு . அவர் எந்த சந்தர்ப்பத்திலும் பொறுமையை மிஞ்சியவர் அல்ல. 

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் மிக நெருக்கமான ஆழமான தொடர்பை கொண்டிருந்த போது தான் சார்ந்த கொள்கையிலிருந்து விலகியவரும் அல்ல. அரபுலக முஸ்லிம் நாடுகளுடன் தான் கொண்டிருந்த மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியிருந்ததனால் முஸ்லிம் சமூகத்தினருக்கு அளப்பரிய உதவிகளை வழங்கினார்.

அனாதைப் பிள்ளைகளின் தந்தையாக சிறந்த பாதுகவலானாக விளங்கினார். ஏழைகளின் வாழ்வு வளம் பெற வேண்டுமென பெரிதும் உழைத்தார். பன்மொழி பாண்டியத்தியம் பெற்ற ஹஸன் அஸ்ஹரி நீண்ட நேரம் சளைக்காமல் உரையாற்றும் திறமை படைத்தவர். 

தனது நாவலிமையால் அனைத்து உள்ளங்களையும் மகிழ்விப்பவர். நாங்கள் மேற்கொண்ட அரசியல் பயணத்தில் அவரும் பங்காளராக இருந்தவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினராக பணியாற்றிய அன்னாரின் மறைவு கட்சிக்கு மாத்திரமின்றி முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்றாலும் சமூகத்திற்காக வாழ்ந்து மறைந்த அவருக்கு அல்லாஹ் கபுறு வாழ்விலும் மறுமை வாழ்விலும் இறைவனின் அருளைப் பெற்று மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அடைய நாம் அனைவரும் அன்னாருக்காக இரு கரமேந்தி பிரார்த்திப்போம். என மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் தனது உருக்கமான செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :