பாசிக்குடாவிலுள்ள தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தின் மூன்று ஏக்கர் தீ

த.நவோஜ்-

வாழைச்சேனை பாசிக்குடாவிலுள்ள தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தின் மூன்று ஏக்கர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரவிய தீயினால் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் பாசிக்குடா கிளையின் உதவி முகாமையாளர் தெரிவித்தார்.

மேற்படி தென்னந்தோட்டத்தில் பரவிய தீயை மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தென்னை அபிவிருத்திச் சபை ஊழியர்கள், கல்குடா பொலிஸார், இராணுவம் ஆகியோர் இணைந்து கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

திடீரென ஏற்பட்ட தீயை உடனடியாக கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததால் 238 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள தென்னந்தோட்டத்தை ஓரளவு பாதுகாக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தென்னந் தோட்டத்தில் தீ ஏதேச்சையாக பரவியதா அல்லது யாராவது தீ வைத்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :