வாழைச்சேனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயல திருவிழா

த.நவோஜ்-

வாழைச்சேனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயமாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் பத்து நாட்கள் திருவிழாவான இடம்பெற்று 29ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையும்.

வசந்த மண்டப பூசையை தொடர்ந்து இறைவன் உள் வீதி வலம் வந்து பின்னர் வாகனங்களில் வெளிவீதி உலா வலம் வந்து மாம்பழத் திருவிழாவில் நிகழ்வான திருவிளையாடல் சிறுவர்களினால் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வானது கலந்து கொண்ட பக்தர்களை கவர்ந்திருந்தது. திருவிளையாடல் இடம்பெற்று முடிந்த பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் ஞானப்பழம் வழங்கி வைக்கப்பட்டது.

மஹோற்சவ பூசைகள் யாவும் யாழ்ப்பாணம் சாம்பாவெளி வீரகத்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு வேதாகம உதயசூரியன் சிவஸ்ரீ.ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :