அதிபர் கமறுதீன் அவர்களின் ஊடக செய்திக்கான அதிபர் கலந்தர்லெவ்வையின் மறுப்பு

எம்.ஏ. தாஜகான்-

திபர் கமறுதீன் அவர்களின் ஊடக செய்திக்கான அதிபர் கலந்தர்லெவ்வையின் மறுப்பு: நடை பெற்று முடிந்த ஜந்தாம் தர புலமைப்பரீட்சையில் பொத்துவில் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட பரீட்சை  நிலையத்தில் தாறுல் பலா/வித்தியாலய மாணவர்களை பொலிசாரைக் கொண்டு சோதனை செய்ததாக இஸ்லாமிய ஆசிரியர்  சங்கத்தினால் வெளியிடப்பட்ட செய்தி முற்று முழுதான பொய்ச் செய்தி என பொத்துவில் மத்திய கல்லூரியில்  அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். கமறுதீன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  விடயத்துக்கான மறுப்புச் செய்தியினை தாறுல் பலா/வித்தியாலய அதிபர் எம்.எல்.கலந்தர் லெவ்வை தனது ஊடக  மறுப்பறிக்கையினை தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கின்ற பொழுது; 

பரீட்சை நடைபெறுவதற்கு முந்திய தினம் பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயத்தின் அதிபரும் பொத்துவில் மத்திய  கல்லூரியில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல். கமறுதீன் அவர்களை சந்தித்தது  உண்மையாகும் ஆனால் நாம் சந்தித்துக்கொண்டது தாறுல் பலா/ வித்தியாலயத்தில் புலமைப்பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்குரிய முன்னோடி கருத்தரங்கு வினாத்தாளினை பெற்றுக் கொள்வதற்காகவும் அத்துடன் மத்திய கல்லூரியில்   பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் உறவினர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்த விடயத்தினை எடுத்துக்கூறி  அந்த மேற்பார்வையாளர்களை உடனடியாக மாற்றுமாறு கூறுவதற்காகவும்தான் நான் சென்றேன். இது பற்றி அதிபர்  கமறுதீன் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். A6 படிவத்தை நிரப்பி அனுப்பி விட்டேன் மாற்றம் செய்ய முடியாது  என்று அவர் பதிலுரைத்தார். இதுதான் நடந்தது. 

அவரிடம் எமது பாடசாலை மாணவர்களுக்காக வேண்டி உதவி செய்யுமாறு நாம் கேட்கவில்லை. எமது பாடசாலைதான் பொத்துவில் கோட்டத்தில் புலமைப் பரீட்சையில் அதி கூடிய மாணவர்கள்  சித்தியடைந்து வருவது இங்கு சுட்.டிக்காட்டப்படவேண்டியது. மேலும் என்னோடு குறித்த அதிபரை சந்திப்பதற்கு சுதந்திர கட்சி  அமைப்பாளரோ தவிசாளரோ வரவில்லை அது கமறுதீன் அதிபர் அவர்களின் பொய்யான கூற்றாகும். 

அடுத்த நாள் எமது தாறுல் பலா/ வித்தியாலயத்தின் மாணவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர்களை வெளியில் செல்லுமாறு   கூறியிருக்கிறார். பொலிசாரும் எமது மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வெளியில்  செல்லுமாறு பணித்திருக்கின்றார்கள். ஏன்று பொத்துவில் தாறுல் பலா/வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.  கலந்தர்லெவ்வை தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியானது ஊடக அறிக்கையில் அல் இர்பான் வித்தியாலயத்தின் அதிபரும் பொத்துவில் மத்திய  கல்லூரியில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல். கமறுதீன் அவர்களினால்  கூறப்பட்ட செய்திக்கான அதிபர் கலந்தர்லெவ்வையின் மறுப்புச்செய்தியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :