ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சற்று முன்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எதிர்ரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஹரின் பெர்னாண்டோ அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக ஹரின் பெர்னாண்டோ போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் நாளை ஹரின் பெர்னாண்டோ வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவிகளை வழங்கிய சபாநாயகர் ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment