ஓகஸ்ட் 23 இல் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி கொழும்பு – 07 இலுள்ள தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஜுன் 21ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஏனினும் குறித்த சமயத்தில் தர்கா நகர் மற்றும் பேருவளை உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கையினை கருத்திற்கு கொண்டு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு, எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி வருடாந்த மாநாட்டை நடத்த தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :