ஐ.நா விசாரணைக் குழு முன்பாக இலங்கையைச் சேர்ந்த 30 பேர் வரை ஸ்கைப் மூலமாக சாட்சியமளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமே இவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
இவ்வாறு சாட்சியமளித்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் மாநாட்டில் வாய்மொழி மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அவசர அவசரமாக சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment