நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை வாகன விபத்துக்குள்ளாக்க சதித் திட்டமொன்று தீட்டப்பட்டு வருவதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் சோபித தேரர் பயணம் செய்த வாகனம் மற்றுமொரு வாகனத்தில் மோதுண்டது.
கொழும்பு ஹோர்டன் பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை வெறும் ஓர் விபத்தாக கருத முடியாது எனவும் இதனை ஓர் சதித்திட்டமாக கருதப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் சோபித தேரர் ஆகியோர் பயணம் செய்த வாகனங்கள் விபத்துக்குள்ளாகியிருந்தன.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் அவரை விடுதலை செய்வதற்காக சோபித தேரர் முயற்சி எடுத்ததாகவும் அந்தக் காலத்திலும் இவ்வாறான ஓர் வாகன விபத்தின் மூலம் தேரருக்கு சேதம் விளைவிக்க முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக சோபித தேரருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment