ஹமாஸினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட படை வீரர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் காஸாவில் இடம்பெற்ற மோதல்களில் அவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது. 23 வயதான கோல்டின் ஹமாஸ் இயக்கத்தினால் கடத்தப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஹமாஸ் இயக்கத்தினர் இதனை முற்றாக நிராகரித்திருந்தனர்.
குறித்த படைவீரர் இருக்கும் இடம் தமக்கு தெரியாது எனவும் ஹமாஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காஸாவில் உள்ள சுரங்கப்பாதைகளை தகர்க்கும் நடவடிக்ககையில் ஈடுபட்டிருந்த படைவீரர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல், அங்கு கடமையிலுள்ள சில இராணுவவீரர்களின் தொடர்புகள் அற்றுப் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இஸ்ரேலின் பாதுகாப்பு கருதி காஸா மீதான தாக்குதல்கள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment