ஏழைகளின் மனங்களை வென்றவர் மர்ஹும் ஹஸன் மௌலவி- இம்ரான் மஹ்ரூப்

திருகோணமலை மாவட்டத்தில் வாழும் ஏழைகளின் மனங்களை வென்றவர் மர்ஹும் ஹஸன் மௌலவி என கிழக்கு மாகாணசபை  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஹஸன் மெலவியின் மரணம் குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வித்தியாசமான ஒரு பாத்திரத்தை வகித்தவர் மர்ஹும் ஹஸன் மௌலவி.  முஸ்லிம் மார்க்க அறிஞரான அவர் அரசியலில் பிரவேசித்திருந்ததன் மூலம் இதனை செய்திருந்தார். இலங்கையிலும்,  எகிப்திலும் கல்வி கற்ற இவர் தனது மார்க்கச் சொற்பொழிவுகள், மேடைப் பேச்சுக்கள், ஜும்ஆ உரைகள் மூலம் பலரைக்  கவர்ந்திருந்தார்.

தனது அரசியல் நிதி ஒதுக்கீடுகளுக்கு அப்பால் ஏழை மக்களை பல்வேறு வழிகளில் உபசரித்ததன் மூலம் அவர்களது  மனங்களில் முக்கிய இடத்தை அவர் பிடித்திருந்தார். இதனால் எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறக் கூடிய  வாய்ப்பு அவருக்கு இருந்தது. 

மாகாணசபை அமர்வு காலங்களில் அன்போடு அழைத்து பல்வேறு ஆலோசனைகளை எனக்கு வழங்கியுள்ளார். அவரிடம் கட்சி  பேதம் இன பேதங்களை நான் கண்டதில்லை. அவரது தமிழ்ச் சொல்லாட்சி மிகவும் அலாதியானது. எவரையும் மிக விரைவில்  கவரும் வகையில் நல்ல சொல்வளங்களை அவர் பயன்படுத்தினார்..

தம்பி, நீங்கள் உங்கள் தந்தை மர்ஹும் எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்களது வாக்காளர் படையின் உதவியுடன் வெற்றி  பெற்றுள்ளீர்கள். ஆனால் என்னிடம் மூன்று வகையான வாக்காளர் படைகள் உள்ளன. விதவைகள் படை, அநாதைகள் படை,  அங்கவீனர் படை என்பவே அவை. இந்தப் படைகள் என்னோடு எப்போதும் நெருக்கமாகவிருப்பதால் எனக்கு எந்தக்  கவலையும் இல்லை. இதே போல நீங்களும் நல்ல வாக்காளர் படையை உருவாக்கினால் உங்கள் தந்தையைப் போன்று எப்போதும்  வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கலாம் என்று அடிக்கடி எனக்கு ஞாபகமூட்டுவார்.

கிண்ணியா அன்னையின் புதல்வராக அவர் இருந்த போதிலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அறிமுகமான  ஒருவராக விளங்கினார். ஏப்போதும் தனது தாய்மண்ணை நேசித்த அவர் தனது உடலும் அங்கேயே அடக்கம் செய்யப்பட  வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்தார். அதனாலேயே அவரது ஆசைப்படி அவரது ஜனாஸா குறிஞ்சாக்கேணி பொது மைவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அவரது மறைவு உடனடித்தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனினும், இறைவனின் மாற்றீடு  ஒன்று நிச்சயம் இருக்கும் என்ற சமய நம்பிக்கை கொண்டோர் என்ற வகையில் நாம் பொருந்திக் கொள்ள  வேண்டியுள்ளது. அல்லாஹ் அவரது செயல்கள் அனைத்தையும் பொருந்திக் கொள்வானாக. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :