சமூக சேவைகளில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்புச் செய்த ஹசன் மௌலவியின் மறைவு பேரிழப்பாகும்- ஜெமீல்

அஸ்லம் எஸ்.மௌலானா-

மார்க்கப் பணிகளிலும் சமூக சேவைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணிப்புச் செய்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவியின் மறைவு கிண்ணியா மக்களுக்கு மாத்திரமன்றி முழு சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரபல மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹசன் மௌலவியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

தேசிய, சர்வதேச மட்டத்தில் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய மார்க்க பேரறிஞரான ஹசன் மௌலவி அவர்கள் தன்னை அத்துறைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் சமூக சேவைகளிலும் அரசியல் துறையிலும் நேரடியாக களமிறங்கி மக்களுடன் பிண்ணிப்பிணைந்து அவர்களுக்காக பணியாற்றி வந்துள்ளார்.

இதற்காக அவர் சமூக சேவை அமைப்புகளைக் கூட நிறுவி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக அனாதைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதற்காக அவர் தனது சொந்த ஊரான கிண்ணியாவில் அநாதை இல்லம் ஒன்றை ஸ்தாபித்து தனது நேரடிக் கண்காணிப்பில் அதனை சிறப்பாக இயக்கி வந்துள்ளார்.

இவை தவிர ஊடகங்கள், மேடைகள் மற்றும் குத்பாப் பிரசங்கங்கள் வாயிலாக தனக்கே உரித்தான தனித்துவப் பாணியில் அவர் நிகழ்த்தி வந்த சமூக சீர்திருத்தம் தொடர்பிலான மார்க்க சொற்பொழிவுகள் மக்களின் தனிப்பட்ட வாழ்விலும் சமூக ரீதியிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் தனது அரசியல் பிரவேசத்தின் மூலம் ஒரு முன்மாதிரியான அரசியல் செயற்பாட்டை சமூகத்திற்கு எடுத்துக் காட்டியிருந்தார். அத்துடன் முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்ட அவர் எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்த காலப்பகுதியில் எம்மோடு கூட்டுப் பொறுப்புடன் சமூகத்திற்காக உழைத்து வந்தார்.

இத்தகை ஓர் உத்தம புருஷரை எமது கட்சியும் கிண்ணியா மக்களும் இழந்திருப்பதானது இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒட்டுமொத்தமான பேரிழப்பையும் வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் அவரது சேவைகளைப் பொருந்திக் கொண்டு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை பரிசாக வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என்று ஜெமீல் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :