மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று (08) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவும் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (08) மாலை வந்தாறுமூலை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment