அட்டாளைச்சேனை SMS கொமினிகேசன் நடாத்திய வாடிக்கையாளர்களுக்கிடையிலான பரிசளிப்பு நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எல்.ரவூப் தலமையில் நிறுவன முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமன பிரதேச செயலக உதவிச்செயலாளர் ஏ.சி.எம்.ஷாஹிர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக அம்பாரை மாவட்ட HUTCH நெற்வேர்கின் பிரதான விநியோகஸ்தர் எம்.ஏ.எம்.இஸ்மாயில் மற்றும் சமூக சேவைகள் காரியாலய உத்தியோகத்தர் ஏ.எம்.ஹஷன் மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது பரிசளிப்பு நிகழ்வில் வெற்றியீட்டிய அட்டாளைச்சேனை 07 ஆம் பிரிவைச்சேர்ந்த யூ.எல்.ஹனீபா என்பவருக்கு துவிச்சக்கர வண்டி பரிசாக வழங்கப்பட்டதுடன் 02ஆம் பரிசாக DVD player 3ஆம் பரிசாக பிரயாணப்பை போன்றவை வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



0 comments :
Post a Comment