மோடியின் 1வது சுதந்திரதின உரை- படங்கள்

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதலாவது சுதந்திரதின உரையில் முக்கிய சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தையும் பால், சாதி மற்றும் மத ரீதியான வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் பற்றி பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் வெட்கமடைவதாகவும் மோடி கூறினார்.டெல்லி செங்கோட்டையில், குறிப்புகள் எதுவும் இன்றி, குண்டு துளைக்காத கண்ணாடியின் முன் நிற்காமல், ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானைத் தாக்குகின்ற விதத்தில் எந்தவிதமான குறிப்பான கருத்துக்களையும் மோடியின் உரை உள்ளடக்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை சர்வதேச உற்பத்திகளுக்கான களமாக மாற்றுவதற்கு உலகம் உதவமுன் வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :