அவதானிப்பு-
01. அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தேசிய காங்கிரஸ் (அமைச்சர் அதாஉல்லா அணி)
02.உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (அமைச்சர் ரவூப் ஹக்கீம் அணி)
அவர்கள் இருவரும் இரண்டு கட்சிகளைப் பிரதிநிதித்துவம் படுத்துபவர்கள்,
ஆனால் இப்போது விபரத்துக்கு வருகிறோம்.
எதிர்வரும் 26.07.2014 அன்று அட்டாளைச்சேனையில் இப்தார் நிகழ்வு இடம்பெற இருக்கிறது இரண்டு அமைச்சர்களும் பிரதம விருந்தினர்களாக வருகைதர உள்ளனர்.
ஆனால் இரண்டும் வெவ்வேறு இடங்களில் இரண்டு கட்சிகளின் மேற்குறிப்பிட்ட இரண்டு முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை ஏன் ஒரே நாளில் வைக்க வேண்டும் என்பதில்தான் இங்கே கேள்வி எழுகிறது.
ஒரே ஊரில் அந்த ஊர் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் இப்தார் ஏட்டிக்குப் போட்டியாக இரண்டு இடங்களில் இடம்பெறுவது ஏன்?
நாட்களை மாற்றி இருக்கலாம் ஏன் மாற்ற முடிய வில்லை நானா..!? நீயா..?! நாளை மாற்றுவதில் அதுதான் இங்கே நடந்திருக்கிறது.
எனவே இனியாவது இப்படி ஒரே நாளில் இரண்டு ஒரே ஊர் மக்களை இப்தார் நிகழ்வுக்கு அழைத்து இரண்டு இடத்துக்கான அழைப்பினைக்கொடுத்து யார் பக்கம் போவது அங்கேயா..?இங்கேயா..? இல்லை இரண்டுக்கும் போகாமல் சத்தம் இல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்து விடுவோமா என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் தோற்ற வைத்துள்ளது அட்டாளைச்சேனை அமைச்சரினதும் உறுப்பினரதும் இப்தார் ஏற்பாடு.
எது எவ்வாறாயினும் இரண்டும் அமைச்சர்களும் ஒரே நாளில் அட்டாளைச்சேனையில் வெவ்வேறு இடங்களுக்கு இப்தார் நிகழ்வுக்கு வந்து கலந்து கொள்வதில் மக்களுக்கு சந்தோஷம்தான், ஆனால் கடந்த வருடங்களில் பாதைகளில் நோன்பு திறந்தது போன்ற கசப்பான இப்தார் நிகழ்வாக அமையாமல் நல்லது நடந்தால் அனைவருக்கும் நல்லதுதானே!.....



0 comments :
Post a Comment