ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் அறபா வித்தியாலயத்தில் இருமாடிகளாக அமைக்கப்பட்டு, முடிவுறா நிலையிலுள்ள “அதாஉல்லா மண்டபத்தின்” இரண்டாம் கட்டப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் ஹபீபுல்லாஹ் மேர்சா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.மேலும் இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஜுனைதீன், மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர் இஸட்.முனீர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், உலமாக்கள் , கல்விமான்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் உரையாற்றுகையில் “ எமது அமைச்சர் அதாஉல்லா அவர்கள் ஆரம்பித்து வைத்த வேலைகளை, அவர்களைக் கொண்டு முடிக்க வேண்டுமென்பதில் நாம் மிகக் கவனமாக இருந்தோம். தற்போது அமைச்சர் அவர்களே தாமாகவே இவ்வேலைகளை முடிக்குமாறு கூறி ரூபாய் பத்து இலட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு கல்விக்கு உதவுவதில் அமைச்சர் அதாஉல்லா என்றும் சோடை போனவரல்ல” எனத் தெரிவித்தார்.
.jpg)




0 comments :
Post a Comment