பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்மா பள்ளிவாயலான சிகரம் முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் இணைந்து கலந்து கொண்ட தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 14-07-2014 இன்று திங்கட்கிழமை மாலை சிகரம் முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
சிகரம் முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தலைமையில் இடம்பெற்ற இவ் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வில்; மண்;முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் கிராம உத்தியோகத்தர்கள், கோயில் தர்மகர்த்தாக்கள் அப் பிரதேச அரச திணைக்களங்களில் கடமை புரியும் அரச உத்தியோகத்தர்கள் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வில் விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் கபூர் மதனி நிகழ்த்தினார்.
இங்கு தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு தொடர்பாக மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரனினால் விஷேட உரை ஒன்றும் நிகழ்தப்பட்டது.
இவ் தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வில் சுமார் 200 பேர் கலந்து கொண்டதாகவும் இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் இன நல்லுறவு வளர்க்கப்படுவதால்தான் 7வது வருடமாக இவ் இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வை நடாத்தி வருவதாகவும் பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தெரிவித்தார்.
.jpg)










0 comments :
Post a Comment