இலங்கை இளைஞர்களிடையே நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது; ஆய்வில் தகவல்

லங்கையில், இளைஞர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று குறிப்பிடுகின்றது.

குறிப்பாக 22 முதல் 30 வயதிலான இளைஞர்கள் மத்தியிலேயே இந்நோய் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் இது மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் கிராமங்களைவிட நகரப் பகுதியிலேயே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களிடையே நீரிழிவு நோய், அதன் ஆபத்து, வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டியத் தேவை ஆகியவை குறித்து அரசு பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும், அவை போதிய அளவில் இல்லை என்பதே ஆய்வினை மேற்கொண்டவர்களின் கருத்தாகும்.
இளைஞர்கள் மத்தியில் உணவுக் கட்டுப்பாடு இல்லாமையும், ஆரோக்கியமான உணவை உண்ணாமையுமே இதற்கான காரணங்களாகும்.

                                                                                                                                 -bbc tamil-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :