இலங்கையை அச்சுறுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை -அமைச்சர் வாசுதேவ

லங்கையை அச்சுறுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக் குழு உறுப்பினர் அஸ்மா ஜஹாங்கீர் முன்வைத்திருக்கும் கருத்துத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்- 

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படக் கூடாது என்பதே அரசாங்கத்தின், பாராளுமன்றத்தின் இந்த நாட்டு மக்களின் தெளிவான நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான உரிமை எமக்கு உள்ளது. 

அவ்வாறு தீர்மானம் எடுக்கக்கூடாது என்று அச்சுறுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை. தென்னாபிரிக்க குழுவினர் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே இலங்கை வருகின்றனர். இவர்களின் வருகை சிறந்த பலனைத் தரும் என்ற எதிர்பார்ப்பிலேயே நான் உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அளுத்கம, பேருவளை சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாக எதிர்க்கட்சி குற்றஞ்சுமத்துகிறதே, இதுதொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, எதிர்ப்பு அரசியல் கொள்கையைக் கொண்ட எதிர்க்கட்சியினர் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர். 

இச்சம்பவங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி தமது பொழுது போக்குக்காக அரசாங்கம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்தை விட மிகவும் மோசமான இனவாத சம்பவங்களை அவர்கள் தோற்றுவித்தவர்கள், இந்த நிலையில் பேருவளை, அளுத்கம சம்பவங்கள் குறித்து கதைப்பவர்கள் தமது கைகள் எவ்வளவு சுத்தமானது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தடுப்பதற்கு அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க அரசாங்கம் தவறிவிட்டது என்பதை அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளாரே என்றும் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. 

பல வருடங்கள் கழித்தாவது அதனை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டிருப்பது நல்லவிடயம். இனவாதத்தைத் தூண்டி அதனை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தவேண்டும் என்ற தேவை ஐ.தே.க தலைமைக்கும் அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்துக்கும் இருந்தது. அக்கட்சியின் ஒரு சிலருக்கும் அப்போதைய குழப்ப சூழ்நிலைக்கும் தொடர்பு இருந்தது என்பதையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :