முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க இருவரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச தீர்மானங்களுக்கு செவிசாய்க்காமல் காலிழுத்துக் கொண்டு இருப்பவர்களும்,சர்வதேச ரீதியாக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்களும், நான் வெளியேற்றுவதற்கு முன்பு அவர்களாகவே வெளியேறுவது நல்லது எனவும் ஜனாதிபதி கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் மாமனாரான கரு ஜெயசூரிய பொது அபேட்சகராகக் களமிறங்குவது தொடர்பில்,தனக்கும் ஐ.தே.கவில் உரிமையிருக்கிறது என்று நவீன் திசாநாயக்க கருத்து வெளியிட்டிருந்தமை ஜனாதிபதியை சினம் கொள்ளச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தள செய்தி ஆசிரியர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலியைத்தொடர்பு கொண்டு கேட்டபோது:
சில ஊடகங்கள் இன்று முஸ்லிம் காங்கிரசைப்பற்றி பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனர் முஸ்லிம் காங்கிரசின் தலைவரைப்பற்றி ஜனாதிபதி எதுவும் கூறவில்லை அப்படி கூறியிருந்தால் அது எனக்குத் தெரிந்திருக்கும் எனவே அது பொய்யானதகவல்
என்று இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment