எஸ்.எஸ்.பி மஜீத் ஸ்ரீலங்கா மு.கா.கட்சியிலிருந்து இராஜினாமா கடிதம்

கௌரவ எம்.டி.ஹசன்அலி
பாராளுமன்ற உறுப்பினர்
செயலாளர் மு.கா.கட்சி
தாருஸ் -சலாம்
51, வக்சள்வீதி
கொழும்பு - 02

05.07.2014


அன்புள்ளசெயலாளர் ;அஸ்ஸலாமுஅலைக்கும்,


ஸ்ரீலங்கா மு.கா.கட்சியிலிருந்து இராஜினாமாசெய்யும் கடிதம்


நான் இந்தக்கடிதத்தை ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், அதிகமனவேதனையுடன் கட்சியின் பிரதித்தவிசாளர்பதவியிலிருந்தும், உறுப்பினரில் இருந்தும் இன்றுமுதல் 05. 07. 2014 இல் இராஜினாமாசெய்கிறேன். காரணம், இக்கட்சியின்அண்மைக்கால நடவடிக்கைகளும், ஏமாற்று நடைமுறையும், காலத்திற்குக்காலம் நிறம்மாறி காரணம்காட்டும் கட்சியாகமாற்றமடைந்து, பதவிகளில் இருப்பவர்களின் இருப்புக்களைப் பாதுகாக்கவும், தனது கொள்கையற்றதலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் தேவையான பக்கவாத்தியங்களை இயக்கவுமேதவிர, முஸ்லிம்களின்நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அல்ல,என்று அண்மைக்கால விவகாரங்கள் நிரூபித்துள்ளன. 

இப்பதவிகளைப்பெற்றுத்தந்த சமூகத்தின் இருப்பைபாதுகாக்காமல், இத்தலைமை, அரசாங்கத்தில் அமைச்சர்பதவியோடு மட்டும் இருந்தால்அரசியலில் நிலைத்துவாழலாம் என்று அண்மைக்கால தீர்மானங்களும், நடவடிக்கைகளும் சாட்சிபகிர்கின்றன. 

எனக்கு இக்கட்சியை விட்டுவிலகும் எண்ணம் இதுவரை இருந்ததில்லை. ஆனால் கடந்தபலமாதங்களாக இந்நாட்டு முஸ்லிம்களுக்கும், குறிப்பாக தர்காநகர், பேருவளை, வெலிப்பன்னை, பாணந்துறை போன்ற பழமையான முஸ்லிம்கிராமங்களில் வாழ்ந்துவரும் எங்கள்சகோதர, சகோதரிகளுக்கும் சென்றமாதம் ஏற்பட்ட உயிர், உடமை இழப்புக்களையும் அசம்பாவீதங்களையும் கண்டபின் நான் இந்தத்தீர்மானதிற்குவந்தேன். 

முஸ்லிம்களுக்கெதிராகநடக்கும்அநியாயங்களுக்குகுரல்கொடுக்கவந்த கட்சியென்றால், தமிழ் சகோதர்களையும், கட்சிகளையும்போன்று நாங்கள் என்ன அர்ப்பணிப்பும், ஆர்பாட்டங்களும், தியாகங்களும்செய்தோம்?
இந்தக்கட்சி புனிதக்குரான், ஹதீஸ் அடிப்படைக்கமைவாக உருபாக்கப்பட்டதென்றால் அதன்படி நாங்கள் நடக்கின்றோமா?அல்லது தலைமைத்துவம் வழிநடத்துகின்றதா?கட்சி ஆரம்பிக்கப்பட்டநோக்கத்தைக்கூட மறந்து விட்டது தலைமை.

இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய பிரச்சினைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு அனுராதபுரம்சியாரம் உடைப்புடன் ஆரம்பித்து, ஹலால் உருதிச்சீட்டுபத்திரத்திற்குள் சென்று, தம்புள்ள பள்ளிவாசல் அகற்றும் நிகழ்வை பொதுபலசேனாவின் மதகுருமாரின் முன்னிலையின் ஒருபயங்கரவாத சூழலை உருவாக்கி இன்றுநாடு முழுவதும் சிறுபான்மை முஸ்லிம்களின் இருப்பை நிர்மூலம் ஆக்கும் நிகழ்வு நிரைவேற்றப்பட்டுள்ளது. 

நாங்கள் ஒருமுஸ்லிம் அரசியல்கட்சி என்றஅடிப்படையில் அனுராதபுரத்திலோ, தம்புல்லையிலோஅல்லது கொழும்பு போலீஸ் தலைமையகத்திலோ இந்த முறைகேடான, சட்டவிரோதமான நடத்தைக்குப் பார்த்திரமாக தலைமை தாங்கியவர்கற்கு எதிராக முறையீடுசெய்தோமா? நீதியைதானும்தேடுனோமா?

நாங்கள் ஒரு முஸ்லிம்அரசியல்கட்சி என்று கூறிக்கொண்டு, 

எம் சமூகத்திற்கு எதிராக அநியாயம்செய்யும் குற்றவாளிகளை குற்றப்பதிவுக்கு கொண்டுவராமல் நியாயம்கூறிக்கொண்டு பதவிப்போட்டிகளுடன் சுயநலன்களை பாதுகாத்துகொள்வதற்கும் அரசாங்கத்துடன் பயணம்செய்கிறோம். 
சமூகப்பிரச்சினைகள் எழும்போது உணர்ச்சிவசமாக பேசிவிட்டு செயலில் சூனியமாகுவதால் சமூகம்சாதித்ததுதான் என்ன?

இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கின்றபொதுபலசேனாவிட்கு எதிராக நா ட்டில் நீதிக்குபொறுப்பாக இருக்கும் அமைச்சர் குறைந்த அளவு, நீதியின் ஊடாக எச்சரிகையாயினும் கொடுக்க முடிந்ததா?

அரசாங்கத்தில்ப ங்காளியாக இருந்துகொண்டு சமூகப்பிரச்சனைகளுக்கு தீர்வு எதையும் கண்டதாக சமூகத்திற்கு தெரியவில்லை. அமைச்சர்பதவியைதுறந்தால் முஸ்லிம்களின் பிரச்சனைகள் முடிந்துவிடுமென்றுகூறும் உத்தரவாதம்கேட்பது இக்கட்சியித் தலைமையின் இயலாத்தன்மையை காட்டுகின்றது.

இதுவரை இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்பிற்கு இன்றைய அரசாங்கமும், மு. கா.கட்சி தலைமைத்துவமும் நல்லவை செய்துள்ளார்கள் என்றுதிருப்தி கண்டால் இக்கட்சியின் எதிர்காலத்தை முஸ்லிம்சமூகமேதீர்மானிக்கட்டும்.
இக்கட்சியில் இருந்த பலபிரமுகர்களும் முக்கியஸ்தர்களும், ஸ்தாபகத்தலைவரின் மனைவியும்கூட முஸ்லிம் என்ற சுவரொட்டியில் அறிமுகமாகி, வளர்ந்து, அனுபவித்துவிட்டு சுயனலதிட்காக கட்சியை துச்சமாக நினைத்து அரசாங்ககட்சியோடுசேர்ந்துஉள்ளார். 

பொத்துவில் எனது ஊர்.இதுமுஸ்லிம்களைப்பெருன்பான்மையாககொண்டதும்.இருந்தும், எமது சமூகம்அங்குஅனுபவிக்கும் துன்பங்களும், தொந்தரவுகளும், அட்டகாசங்களும், காணிச்சுவீகரிப்புகளும் எண்ணிலடங்காது.இவ்வூர்மக்கள்எங்கேசெல்வது? யாரிடம்சொல்வது?என்றுதிக்குத்தெரியாமல்தடுமாறுகின்றனர்.கிரீஸ் மனிதன் பிரச்சனைஆரம்பித்தகாலம்தொட்டு இதுவரை பல்வேறுதரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கமுடியாமல் தத்தளிக்கின்றனர். 

இரண்டு வருடங்களுக்குமுன்கிரீஸ்மனிதவிவகாரத்தில்இராணுவவெடியில் மரணித்த மு.கா.கட்சி பிரதேசசபை வேட்பாளரின் மனைவிக்குத் தகமை இருந்தும் அமைச்சின் ஊடாக குடும்பவாழ்வாதாரத்தை கொண்டு செல்ல ஒரு தொழிலை பெற்றுக்கொடுக்கலாமென்று இன்றுவரை முயற்சித்தேன். முடியாமல்போய்விட்டது.பொத்துவிலில் ஒருவருக்காயினும் தொழில்கொடுக்கமுடியாதகட்சியும், அமைச்சர்பதவியும், அமைப்பாளர்பதவியும் எதற்கு?நாம்வெட்கித்துதலைகுனியவேண்டியசூழல்.

இக்கட்சித்தலைமைஉணருமா? 

கையில்இருக்கும்கத்திதங்கத்தால்செய்ததென்பதற்காகவயிற்றில்குத்திக்கொள்ளமுடியுமா?ஒருசிலர்அமைச்சுப்பதவிகளைஅனுபவித்தால், முஸ்லிம்சமூகம்சுதந்திரமாகவும், தன்னிரைவோடும்வாழ்கின்றார்கள்என்றஅர்த்தமா? அல்லதுஎண்ணமா?
இக்கட்சி தலைமைத்துவத்தின் தொடர்ச்சியான சீர்கேடும், நம்பிக்கையீனமும்தான், இக்கட்சியில்தொடர்வதைமுடிவுக்குகொண்டுவரத்தூண்டியது.இந்தகட்சியில் நான்சேர்ந்தநோக்கம் தோல்விகண்டுள்ளது. எனவேதான் இத்தலைமைத்துவத்தின்கீழ் என்னால் இனியும்பயணிக்கமுடியாது.

மேல்கூறியகாரணங்களாலும்அம்பாறைமாவட்டத்தின்பொத்துவிலை சேர்ந்தவனும், சமூகத்தை நேசிப்பவன் என்றரீ தியிலும்இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறைகளைக்கண்டித்து மு. கா.கட்சி காட்டிய எதிர்ப்பும், 

உணர்ச்சியும்அற்பனமும்தமிழ்கட்சிகளோடுஒப்பிடும்போதுபற்றாகுறையானது என்ற ஆட்சேபனையை, ஓய்வுபெற்றபொலிஸ்அதிகாரி, முன்னாள்பாராளுமன்றஉறுப்பினர், முன்னாள்மாகாணசபைஉறுப்பினர் என்ற பார்வையின் அடிப்படையில் கட்சியிலிருந்து இன்று இராஜினாமாசெய்கிறேன்.

இச்செய்தியைஎல்லாஉயர்பீடஉறுப்பினர்களுக்கும்தெரிவிக்கவும். 


நன்றி
எம்.அப்துல் மஜீத்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :