எதிர்வரும் காலங்களில் அரச மருத்துவமனைகளை இழுத்து மூட வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிடுமோயென்று நினைக்க தோனுகிறது, இன் நிலை உருவாகுமாயின் அங்கு பணியாற்றும் தாதிகள்,சிற்றூழியர்களின் நினை என்னவாகுமென்று ஒரு கற்பனை தோன்றுகின்றது.
முன்னைய காலங்களில் நமது ஊர் நிந்தவூருக்கு ஓர் மருத்துவமனை இல்லையென்று ஊர் மக்களிடையில் ஓர் கவலையிருந்துகொண்டே வந்ததாம் அதுவே காலபோக்கில் சில மகான்களின் உதவுகளோடு நம் ஊருக்குள்ளேயே ஒரு மருத்துவமனை அமைக்கபட்டதாமென்று சில பழைமை வாதிகள் கூறுகிறது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவ் அரச மருத்துவமனைகளை திரை போட்டு மூடவேண்டிய கட்டைய சூழ்நிலை உருவாகிவருகின்றது.
காரணம் இன்று பெரும்பாலான மக்கள் மனங்களில் அரச மருத்துவமனைகளை புறக்கணிப்பதும், அதில் சிகிச்சை பெறுவதையும் ஒரு தரக்குறைவாகவும், கௌரவ குறைச்சலாகவும். நினைக்கின்றனர். இன்று ஏராளமானோர் பணத்தை வாரி இறைத்து கௌரவம் பெற்றுகொள்வதற்காக. தனியார் மருத்துவமனைகளிலும் வைத்தியர்களின் வீட்டு கிளினிக்களிலும் தனிப்பட்டரீதியில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்,
இதில் வசதிபடைத்தோர் மட்டுமின்றி வசதியற்ற ஏழைகள் கூட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவேண்டிய கட்டைய சூழ்நிலை உருவாகிகொண்டிருக்கிறது அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நாகரீகம்வளர்ச்சியடைந்து மக்கள் மனங்களில் தரக்குறைவும்,புறகணிப்பும் மருத்துவத்தில்கூட கௌரவம் போன்ற செயல்கள் ஒட்டி உறவாடுகின்றது.
அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதை கௌரவ குறைச்சலாக எண்ணும் மக்கள், தான் ஒரு நோயாளியென்ரு பிறர் அறிந்துகொள்ளும் பட்சத்தில்,அதை மட்டும் ஏன் கௌரவ குறைச்சலாக எண்ணுவதில்லை..?
அரச மருத்துவமனைகளில் சிகிச்சை அழிக்கும் அதே வைத்தியர்களே தனியார் மருத்துவமனைளிலும் அதே சிகிச்சையளிக்கின்றனர் இதில் தனியாரில் சிகிச்சை பெறுவதனால் வைத்தியர்கள் சற்று உன்னிப்பாக அதிக சிகிச்சையளிப்பதாகவும் அதே சிகிச்சை அரச மருத்துவமனைகளில் பெறுவதாயின் சற்று குறைவாகவும்சிகிச்சையளிப்பதாக வைத்தியர்கள்மேல் மக்கள் குறை கூறுகின்றார்கள்
>>இக் குறை தொடர்பாக வைத்தியர்கள் உங்கள் கருத்துக்கள்தான் என்ன.............?????
முன்னைய காலங்களை விட இன்று அரச மருத்துவமனைகளில் சகல வசதிகளும் அமைக்கபட்டிருந்தும் மக்கள் தனியார மருத்துவமனைகளை அதிகம் நாடிச்செல்வது ஏன்........????
சந்தர்ப்பம் சூழ்நிலை காரணங்களினால் தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்வதாயின், இதில் அராச மருத்துவமனைகளை தரக்குறைவாக புறக்கணிப்பதும் , கௌரவ பிரச்சனைகளை முன்வைப்பது உகந்ததல்ல என்பது எனது கருத்து.
முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்

0 comments :
Post a Comment