வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் சகோதரர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனை

எம்.எம்.ஏ.ஸமட்-

நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் நமது  பலஸ்தீனிய சகோதரர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு சகல  முஸ்லிம்களிடமும் சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா-ஸ்ரீலங்கா)  வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா-ஸ்ரீலங்கா) விடுத்துள்ள வேண்டுகோளில்; குறிப்பிட்டுள்ளதாவது சர்வதேச ஊடகங்களின் தகவல்களின் பிரகாரம,; கடந்த 9 நாட்களாக இஸ்ரேலிய  கொடுங்கோளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இனச் சுத்தகரிப்பினால் முதியோர் பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக இதுவரை 215 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1500க்கும்  மேற்பட்டோர் காயைமடைந்தும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டும் உள்ளனர்.

இஸ்லாத்தின் பகைவர்களான இஸ்ரேலியர்களினால் அப்பாவி நமது இஸ்லாமிய சகோதரர்களின் தேசம் அழிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இஸ்ரேலிய ஊடகங்கள் சில எதிர்கால இஸ்லாமிய சந்ததிகளை அழிக்குமாறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற வேளை, நேற்று(16) காலை காஸா கடற்கரையில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த பலஸ்தீன எதிர்காலச் சந்ததிகளான 4  சிறுவர்கள் கோராக இஸ்ரேலிய கடற்படையினால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.(இன்னாலிலாஹி வயின்னா இலைஹிராஜுன்) 
இதுவரை காஸாவில் கொள்ளப்பட்டுள்ளவர்களில் 45க்கும் மேற்பட்டோர் சிறுவர்களாவர். 

இவ்வாறு திட்டமிட்டு கொள்ளப்படும் நமது சகோதா இஸ்லாமிய மக்களின் மறுவாழ்வுக்காகவும் காயப்பட்டு அவதியுறும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்காவும் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மன அமைதிக்காகவும் இஸ்லாத்தின் ஜென்ம விரோதிகளான இஸ்ரேலியர்களின் திட்டம் தவிடுபொடியாகி பலஸ்தீன தேசம் வெற்றிகொள்ளப்படுவதற்காக போராடும் போராளிகளின் உடல் உள வலிமைக்காவும் நாளை ஜும்ஆ தொழுகையின் பின்னர் சகல பள்ளிவாசல்களிலும் விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு (சிடா ஸ்ரீலங்கா) அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டுகோள்விடுக்கிறது


அத்துடன், மதவாத கடும்போக்களார்களின் திட்டங்கள் வெற்றியளிகாதிருக்கவும், சமூக ஒருமைப்பாட்டுடன் சகல இனங்களும் நிம்மதியாக வாழவும். இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நெருக்கடிகள் இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு சமூக 
ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா-ஸ்ரீலங்கா) அதன் வேண்டுகோளில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :