ஏ.எல் ஜனூவர்-
சுகாதார அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30 தொடக்கம் ஜூலை 5 வரை நாடெங்கிலும் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு நாடுபூராகவும் உள்ள இலங்கை வங்கியின் 618 கிளைகளிலும் இன்று (05) டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது..
அட்டாளைச்சேனை இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.சி கியாஸ்தீன் தலைமையில் அட்டாளைச்சேனை அல்.முனிரா பெண்கள் உயர் பாடசாலையில் டெங்கை ஒழிப்போம் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இலங்கை வங்கி ஊழியர்கலினாலும்,இப் பாடசாலை மாணவிகளினாலும் பாடசாலை சூழல் துப்புரவு செய்யப்பட்டு இது சம்பந்தமாக மாணவிகளிடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம் பெற்றது
இச் சிரமதான நிகழ்வில் அட்டாளைச்சேனை இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.சி கியாஸ்தீன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பரூஸா நக்பர்,பாடசாலை அதிபர் எம்.அப்துல் சலாம்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர், வங்கி ஊழியர்களான அஸ்கர்,பெரோஸ்,அஹ்லம்,நபீர்,கியாத் முகம்மத் உட்பட பாடசாலை மாணவிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment