மகிந்த சிந்தனை திட்டத்தில் 29 வீதமான வன வளத்தினை 2020ம் ஆண்டில் 35 வீதமான மாற்றுதல்


த.நவோஜ்-

லங்கையில் தற்போதுள்ள 29 வீதமான வன வளத்தினை 2020ம் ஆண்டில் 35 வீதமான மாற்றுவதே மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் நோக்கம் என மட்டக்களப்பு மாவட்ட வன பரிபாலனத் திணைக்களத்தின் அதிகாரி டி.பிரசாத் தெரிவித்தார்.

வன பாதுகாப்பு மற்றும் விழிப்புக்குழு அமைத்தல் மற்றும் வனங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தல் தொடர்பாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முருத்தானை கிராம சேகவர் பிரிவிலுள்ள அக்குறாணை பாரதி வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வனவள உதவி பணிப்பாளர் எம்.ஏ.நபீஸ் உதவி வட்டார அதிகாரி என்.செல்வநாயகம் பகுதி வனவள திணைக்கள உத்தியோகத்தர் ஏ.பி.கரீந்த வனவள திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.கியாஸ்ää முருத்தானை கிராம சேவை உத்தியோகத்தர் லத்தீஸ் காந்தன் 232ம் படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் அமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

வனங்களுக்கு என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை அழிப்பதனால் மழை இல்லாமல் போகின்றது. மழை உரிய காலத்தில் பெய்யாவிட்டால் விவசாயம் முற்றாக பாதிப்படைகின்றது. இதனால் பாதிப்பு பொது மக்களாகிய எமக்கே என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரச காணிகளை முறையற்ற வகையில் கைப்பற்றுவதுää வனங்களை அழிப்பதுää மிருகங்களை வேட்டையாடுவது போன்ற வனக்குற்றங்களைச் செய்பவர் நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஐந்து வருடம் வரை தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுண்டு.

சேனைப் பயிர்ச் செய்கைக்காக காட்டுக்கு தீ வைத்தல் மற்றும் சட்ட விரோதமான முறையில் மரங்களை வெட்டுவதன் மூலம் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு கிராம மக்களின் உதவி மிகவும் அவசியம்.

அவ்வாறான குற்றங்களைச் செய்பவர்களைக் கண்டால் வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடத்தில் முறையிடுவதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

முருத்தானை கிராம சேவகர் பிரிவில் முருத்தனை அக்குராணை மினுமினுத்தவெளி கல்லடிவெட்டை கானாந்தென்னை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம சேகவர் பாடசாலை அதிபர் ஆலய நிருவாகிகள் உள்ளடங்களாக வன பாதுகாப்பு வழிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :