இக்பால் அலி-
இந்த நாடு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களுடைய நாடாகும், இந்நாட்டின் அரசியல் யாப்பின்படி சிங்கள, முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ மக்கள் சமய வழிபாடுகளைச் சுதந்திரமாகப் பின்பற்றவும் சுதந்திரமாகப் பேசவும் அதிகாரம் உள்ளது. எமது நாட்டில் சட்டத்தையும் நீதியையும் சமாதானத்தையும் பாதுகாப்பதற்கு பொலிஸார் உள்ளனர். கலவத்தை அடக்குவதற்காக படையினர் உள்ளனர். இலங்கை துரதிருஷ்டவமாக யுத்தமொன்றுக்கு முகம்கொடுக்க நேரிட்டது.
இந்த யுத்தத்தின் போது கூடுதலாகப் பாதிக்கப்பட்டோர் வரிசையில் முதலாவதாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களாகும். அடுத்ததாக அப்பகுதியில் வாழ்ந்த அப்பாவித் தமிழ் மக்களாகும்.என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 64 வது பேராளர் மாநாடு மடவளை பஷார் அல் மதீனா தேசிய பாடசாலையின் மறைந்த அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் பேரவையின் தேசியத் தலைவர் கே. என. டீன் தலைமையில் இன்று 22-06-2014 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உயர் கல்வி அமைச்சர் அங்கு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இந்தக் காலங்களின் போது தலதா மாளிகை உட்பட நாட்லுள்ள சமயத் தலங்கள் யாவும் தாக்கப்பட்டன. உயிரிழப்புகள் நிகழ்ந்தன. ரயில் நிலையங்களிலும் பஸ் நிலையங்களில் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களான ஜேர் ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாச, டி. பீ விஜயதுங்க , சந்திரிக்கா போன்றவகளினால் இந்தக் கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாற் போனது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; ஒரு முடிவுக்கு கொண்டு இந்த நாட்டில் சகல இன மக்களும் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்.
மீண்டும் துரதிருஷ;டமாக அந்த நிலைக்குச் செல்வதற்கான சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையயே குரோதத்தை விதைத்து பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தொடரான பிரச்சினை முன்னெடுக்கவே இந்த செயற் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட தொழில்திறன் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை பஷார் சேகு தாவூத் பேசுகையில்நெருக்கடியான சூழலில் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களோடு கைகோர்த்துத்தான் எதிர் கொள்ள வேண்டும் என்ற உண்மையான யதார்த்தை நாங்கள் புறந்தள்ள முடியாத சூழலிலே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இலங்கை மக்கள் அனைவரையும் ஒன்றிணைந்து வன்முறையற்ற புரிந்துணர்வுடைய, சகிப்பத்தன்மையுடைய ஒரு இலங்கைச் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு பாடுபட முடியாது என்ற கேள்வியைக் நான் இங்கு கேட்டு அதற்குரிய பதிலாக முஸ்லிம்களுக்கு வை. எம். எம். ஏ இருப்பதைப் போல பௌத்தர்களுக்கு வை. எம். பி. ஏ இருக்கிறது. இந்துக்களுக்கு வை. எம். எச. ஏ. இருக்கிறது. கிறிஸ்வர்களுக்கு வை. எம். சீ. ஏ இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தூபமிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவர்களுடன்கலந்துரையாடி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை இங்கு முன் வைக்கவிரும்புகின்றேன்.
இந்தத் தருணத்தில் எமக்காக ஒரு கடமை இருக்கின்றது. அந்தக் கடமை என்னவென்றுதான் கேள்வி. இன்று இந்த சமூகத்திற்குத் தேவைப்பட்டது. சிந்தனைமிக்கத் தலைவர் சிந்தனாபூர்வமான தலைமைத்துவம் தான் இன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவையானது என்பiதைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உணர்ச்சிபூர்வமான தலைமைத்துவம் என்பது இந்தக் கட்டத்திலே முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுவது எந்தவிதப் பொருத்தமும் அற்றது என்பது என்னுடைய அபிப்பிராயம்.
இன்று சமூக வலைத்தள ஊடகங்களுக்கு ஊடாக எல்லாத் தரப்பினரிடையே நடக்கின்ற ஊடாக இருக்கின்றது. முஸ்லிம்கள் சிந்தனை வயப்பட்டு செயற்படுபவர்களாக சிந்தனைத் தலைமைத்துவத்தை அங்கீகரித்துப் போகின்றவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அது மாத்திரமல்ல இந்நாட்டிலே இருக்கின்ற அரசியல் தலைமைகள் ஒரு கூட்டுமொத்த சிந்தனைக்கு வர வேண்டும்.
அரசியல் என்று வரும்போது சமுதாயத்தின் அரசியலையும் இந்நாட்டின் தேசிய அரசியலையும் ஒருங்கிணைத்துப் பார்த்து வடிவமைத்து இந்தக் காலத்திலே வெளிக்காட்ட வேண்டும்.
தனியே முஸ்லிம்கள் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் தனியாக தனியொரு சமுதாயமாக நின்று முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அதற்கான வரலாறும் கிடையாது. முதன்முதலாக ஒல்லாந்தர்கள் முஸ்லிம்களுக்கு அடித்தார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை அரசன் செனரத் குடியமர்த்தினான். அந்த அரசன் இல்லை என்றால் இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இருக்க முடியுமா? மூன்று நான்கு தடவைகள் முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்முள்ளார்கள். அதில் ஒன்று ஒல்லாந்தரினால் தாக்கப்பட்டுள்ளோம்.
நாங்கள் பெரும்பான்மையினமான சிங்கள மக்களுடன் நாங்கள் இருந்தோம். அதனால் சிங்கள மக்களினால் நாங்கள் பாதுகாக்கப்பட்டோம்.1915 ஆம் ஆண்டு முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான கலவரம். இந்தக் கலவரத்தை பிரித்தானியர்கள் அடக்கினர். அதற்குப் பின்னர் பெரும் கலவரம் வடக்கிவிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஹஜ்ஜாஜிகள் கொலை செய்யப்பட்டார்கள். தனியாக பொலிஸார் பிரித்தெடுத்துக் கொல்லப்பட்டார்கள். இந்த நேரத்திலும் நாங்கள் பெரும்பான்மையினமான சிங்கள மக்களுடன் தான் இருந்தோம்.
பௌத்தம் வன்முறையை வலியுறுத்த வில்லை. தீவிரவாதம் பௌத்ததில் இல்லை. தீவிரவாதத்தை நம்பாதே, பூப்பறித்து பூஜை செய்து சந்தோசமாக வாழ்கின்ற எல்லாக் கிராமங்களிலும் நகரங்களிலும் தலைநகரத்திலும் உண்மையாக நம்பி வாழுகின் பௌத்தர்களை முஸ்லிம்களின் பாதுகாப்பாளர்களாக நாங்கள் எண்ணவும் வேண்டும். அவர்களுக்குள் வேலை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இந்த முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முடியும் என்று நான் திடமாக நம்புகின்றேன். அது மாத்திரமல்ல முஸ்லிம்களிடையே காணப்படும் எல்லாப் பிரிவினைகளையும் துறந்து ஒரு தேசிய ரீதியாக இந்தப் பிரச்சினையைப் நாங்கள் பார்க்க வேண்டும்.
ஜனாதிபதி நினைக்கக் கூடாது இந்த வன்முறை மூலமாக நாங்கள் இழப்பது முஸ்லிம்களுடையுதும் சிறுபான்மையின மக்களுடைய வாக்குகள் மட்டும் தான் என்று. பொது பல சேன, ராவய பலய போன்ற தீவிரவாத பௌத்த இயக்கங்களை போன்ற 90 விகிதமான பௌத்த மக்களுடைய வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ இழக்கின்ற அபாயம் இருக்கின்றது என்பதை நான் அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
இந்த அரசாங்கம் பொதுபல சேனாவுக்கு எதிராக, இராவன பலயவுக்கு எதிராக நடடிவடிக்கை எடுக்கத் தவறுமாக இருந்தால் அவர்களுடைய தீவிரவாத வாக்குகள் இல்லாமற் போய்விடும் என்ற அச்சப்படுவதாக இருந்தால் இந்த தீவிர வாதத்தை விரும்பாத 90 விகிதமான பௌத்த மக்கள் அடுத்த தேர்தலிலே கட்டாயம் பாடம் படிப்பிப்பார்கள் என்பதை சொல்ல விரும்புகின்றேன். அதனால் தான் முஸ்லிம்கள் சமூகத்தை தனியாக இயங்குவதை விடுத்து அந்த பௌத்த மக்களோடு இயங்குவதற்கு அடையாளப்படுத்துவதற்கு உண்மையான சமாதானத்தோடு வாழ விரும்புகின்ற மக்களோடு முஸ்லிம் சமூகத்தை கூட்டிணைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
அதனால்தான் சொன்னே; தமிழ் சமூகத்தின் நீண்ட கால யுத்ததின் போராட்டத்திலிருந்து நாங்கள் படிக்க வேண்டிய ஒரே படிப்பினை இந்த நாட்டிலே பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களிலிருந்து அந்நியப்படுத்தியதுதான். அந்தச் சிங்களப் பெரும்பான்மையின மக்களையும் தங்களுடைய எதிரிகளாக கணக்கெடுத்துச் செயற்பட்டமைதான். சிங்கள் பௌத்த அரசியல் வாதிகபை; போன்று சாதாரண மக்களுக்கும் தங்களுடைய மக்களுக்கும் சரியாக போராட்டத்தைப் பற்றி விடுதலையைப் பற்றி சரியாக தங்களுக்கு இருக்கின்ற உணர்களைப் பற்றி பறக்கணிக்கப்படுவதைப் பற்றி அந்த மக்களுக்குள் கொண்டு செல்லாமல் தன்னுடைய சொந்த மக்களுக்குள் தனிமைப்படுத்திச் செய்யப்பட்ட அந்த அரசியல்தான் அவர்களுக்கு பெரும்
தோல்வியைக் கொடுத்தது. அதைத்தான் முஸ்லிம் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
தொடரும்;
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment