த.நவோஜ்-
சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடன் கிராமங்கள் தோறும் களவு, கஞ்சா விற்பனை, சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்ற விடயங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நான்கு பிரதேச செயலாளர் பகுதிகளில் உள்ள சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களுக்கான சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் வாழைச்சேனை பொலிஸின் சமூகப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு சிவில் பாதுகாப்பு பிரதி நிதிகள் ஏற்கனவே வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று தொடர்ந்து வழங்குவதன் மூலம் எமது பகுதியில் முற்றாக் குற்றச் செயல்களை ஒழிக்க முடியும்.
அதேபோன்று இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு ஒரு சில தீய சக்திகள் நாடளாவிய ரீதியில் முயற்சித்து வருவதாகவும், அவ்வாரானவர்களுக்கு எமது பகுதியில் இடமளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மதப் பெரியார்கள், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிரான், ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment